சாத்தான்குளத்தில் வீடுபுகுந்து பெண் மீது தாக்குதல்
சாத்தான்குளத்தில் வீடுபுகுந்து பெண் மீது தாக்குதல் நடத்தப்பட்டது;
சாத்தான்குளம்:
சாத்தான்குளம் அருகே வேலன்புதுக்குளத்தை சேர்ந்த முத்தையா மனைவி நல்லதாய் (வயது 39). இவரது உறவினரான பத்திரகாளி மகன் மற்றும் அதே பகுதியை சேர்ந்த ஆறுமுகம் மகன் பேச்சி (48) ஆகியோர் இடையே தகராறு ஏற்பட்டு முன்விரோதம் உள்ளது. இந்நிலையில் சம்பவத்தன்று பத்திரகாளியின் மகனை தேடி அவரது வீட்டுக்கு பேச்சி, அவரது மகன் சுடலைக்கண் மற்றும் பாதாளம் மகன் மற்றொரு சுடலைக்கண் ஆகிய 3 பேரும் வந்து தகராறில் ஈடுபட்டனர். இதனால் பத்திரகாளி, அச்சம் அடைந்து உறவினரான நல்லதாய் வீட்டில் சென்று தஞ்சம் புகுந்தார். பத்திரகாளிக்கு அடைக்கலம் கொடுத்ததால் ஆத்திரம் அடைந்த பேச்சி உள்ளிட்ட 3 பேரும் நல்லதாயை அவதூறாக பேசி தாக்கி கொலைமிரட்டல் விடுத்தனர். இதில் படுகாயம் அடைந்த அவர் சாத்தான்குளம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்த புகாரின்பேரில் சாத்தான்குளம் ேபாலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அருள்சாம்ராஜ் வழக்குப்பதிவு செய்து தந்தை, மகன் உள்ளிட்ட 3 பேரையும் வலைவீசி தேடி வருகிறார்.