கயத்தாறு அருகே போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது

கயத்தாறு அருகே போக்சோ சட்டத்தில் வாலிபரை போலீசார் கைது செய்தனர்

Update: 2021-08-23 12:07 GMT
கயத்தாறு:
கயத்தாறு அருகே உள்ள சிவஞானபுரம் பஞ்சாயத்து கரிசல்குளத்தை சேர்ந்த பாலசுப்பிரமணியன் மகன் மணிகண்டன்(வயது26). இவர் தனியார் காற்றாலை கம்பெனி ஒன்றில் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு ஊருக்கு அருகிலுள்ள கோவிலில் கொடை விழா நடந்துள்ளது. அங்கு குடும்பத்தினருடன் வந்திருந்த 13 வயதுடைய பள்ளி மாணவியை மணிகண்டன் ஆசை வார்த்தை கூறி நெல்லைக்கு கடத்தி சென்றதாக கூறப்படுகிறது.
நெல்லையிலுள்ள நண்பர் ஒருவரின் வீட்டில் அந்த மாணவியுடன் மணிகண்டன் தங்கியுள்ளார். கோவிலில் இருந்து மாணவி காணாமல் போனதால் பதறிப்போன குடும்பத்தினர் கயத்தாறு போலீசாரிடம் புகார் செய்தனர். இன்ஸ்பெக்டர் முத்து தலைமையில் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். இதில் நெல்லையில் தங்கியிருந்த வாலிபரையும், மாணவியையும் பிடித்தனர். இருவரையும் கயத்தாறு போலீசார், அனைத்து மகளிர் போலீசாரிடம் ஒப்படைத்தனர். இதுகுறித்து இன்ஸ்பெக்டர் பத்மா போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து மணிகண்டனை கைது செய்தார். பள்ளி மாணவி, பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டார்.

மேலும் செய்திகள்