புகையிலை பொருட்கள் விற்றவர் கைது
புகையிலை பொருட்கள் விற்றவர் கைது செய்யப்பட்டார்.
கம்பம்:
கம்பம் வடக்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கலைச்செல்வன் தலைமையில் போலீசார் கம்பம்மெட்டு காலனி பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது இப்ராகிம் (வயது 58) என்பவர் கடையில் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்றது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். அவரது கடையில் இருந்து 13 புகையிலை பாக்கெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது.