வெளிநாடுகளுக்கு அனுப்ப இருந்த 78 கார்களில் பேட்டரி திருட்டு; டிரைவர்கள் 7 பேர் கைது

ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார் நிறுவனங்களில் தயாரிக்கப்படும் விலை உயர்ந்த கார்களை, கப்பல் மூலம் வெளிநாடுகளுக்கு அனுப்புவதற்காக கன்டெய்னர் லாரிகளில் கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு மீஞ்சூரை அடுத்த காட்டுப்பள்ளியில் உள்ள தனியாருக்கு சொந்தமான துறைமுகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

Update: 2021-08-23 05:56 GMT
கப்பலில் ஏற்றுவதற்கு முன்பாக அந்த கார்களை அதிகாரிகள் சோதனை செய்தனர். அதில் 78 கார்களில் இருந்த பேட்டரிகள் மாயமாகி இருப்பது தெரிந்தது. உடனடியாக துறைமுக அதிகாரிகள், அந்த கார்களை இறக்கி விட்டு சென்ற கன்டெய்னர் லாரிகளை மடக்கி சோதனையிட்டனர். அதில் ஒரு லாரியில் இருந்த கன்டெய்னர் பெட்டியில், கார்களில் இருந்து திருடிய ரூ.4 லட்சம் மதிப்பிலான 78 பேட்டரிகளை மறைத்து வைத்து இருப்பதை மேற்பார்வை அதிகாரி உமா சங்கர் கண்டுபிடித்தார்.

இதையடுத்து கன்டெய்னர் லாரி டிரைவர்கள் 7 பேரை பிடித்து காட்டூர் போலீஸ் நிலையத்தில் துறைமுக அதிகாரிகள் ஒப்படைத்தனர். இது குறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கன்டெய்னர் லாரி டிரைவர்களான வெங்கடேசன் (வயது 32,) இளமாறன்(29), பாண்டிகண்ணன் (36), பார்த்திபன் (33), கார்த்திக் (36), சதீஷ்குமார் (27), நிர்மல் (22) ஆகிய 7 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

மேலும் செய்திகள்