மண் கடத்திய டிராக்டர் பறிமுதல்
மண் கடத்திய டிராக்டர் பறிமுதல் செய்யப்பட்டது.
ஜெயங்கொண்டம்:
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே தேவனூர் கிராமத்தில் தமிழ்நாடு தொழில் வளர்ச்சி கழகத்திற்கு சொந்தமான இடத்தில் மதிவாணன் என்பவர் கிராவல் மண் அள்ளுவதாக கிடைத்த ரகசிய தகவலின்பேரில் தேவனூர் வருவாய் ஆய்வாளர் அசோக்ராஜ் உள்ளிட்ட அதிகாரிகள் அங்கு சென்று பார்த்தனர். அப்போது மதிவாணன் தனது டிராக்டரில் கிராவல் மண் அள்ளி கடத்தியது தெரியவந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து அளிக்கப்பட்ட புகாரின்பேரில் ஜெயங்கொண்டம் போலீசார் வழக்குப்பதிந்து டிராக்டரை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.