தனியார் சிமெண்டு நிறுவனத்தில் இரும்பு பொருட்களை திருடியவர் கைது

தனியார் சிமெண்டு நிறுவனத்தில் இரும்பு பொருட்களை திருடியவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2021-08-22 20:46 GMT
விக்கிரமங்கலம்:
அரியலூர் மாவட்டம் விக்கிரமங்கலம் அருகே வி.கைகாட்டியில் அல்ட்ராடெக் நிறுவனத்துக்கு சொந்தமான சிமெண்டு ஆலை உள்ளது. நேற்று முன்தினம் அந்த நிறுவனத்திற்கு சொந்தமான இடத்தில் மேற்கூரை அமைப்பதற்காக இரும்பு கம்பிகள், தகர ஷீட்டுகள் ஆகியவை அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. இதில் சுமார் ரூ.50 ஆயிரம் மதிப்பிலான இரும்பு பொருட்கள் திருட்டு போனது. இதுகுறித்து சிமெண்டு நிறுவனத்தின் சார்பில் விக்கிரமங்கலம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் லோகநாதன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். இதைத்தொடர்ந்து இந்த திருட்டு சம்பவம் தொடர்பாக சந்திரபாளையம் கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த பழனிச்சாமியை(40) போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்