ஓடும் காரில் உடல் கருகி வாலிபர் பலி
ஓடும் காரில் உடல் கருகி வாலிபர் பலியானார்
மணப்பாறை
திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த சித்தாநத்தம் பிரிவு சாலை அருகே திண்டுக்கல்-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் நேற்று சென்று கொண்டிருந்த கார் ஒன்று திடீரென தீப்பற்றி எரிய தொடங்கியது. இதனை பார்த்ததும் அந்த வழியாக சென்றவர்கள் மணப்பாறை தீயணைப்பு நிலையம் மற்றும் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். மணப்பாறை தீயணைப்பு நிலைய அதிகாரி சக்திவேல் மூர்த்தி தலைமையில் வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். பின்னர் காரை திறந்து பார்த்த போது டிரைவர் சீட்டில் வாலிபர் ஒருவர் உடல் கருகி பிணமாக கிடந்தார். இதுகுறித்து காரின் பதிவு எண்ணை வைத்து நடத்திய விசாரணையில் இறந்தவர் திருச்சி தென்னூர் மூலக்கொல்லை பகுதியை சேர்ந்த நாராயணன்(வயது 32) என்பதும் சொந்தமாக கார் வைத்து ஓட்டி வந்ததும் தெரிய வந்தது. டிரைவர் சீட் லாக் ஆனதால் வெளியில் வர முடியாமல் உயிரிழந்து இருக்கலாம் என்று கூறப்படுகிறது.