கர்நாடகத்தில் புதிதாக 1,189 பேருக்கு கொரோனா
கர்நாடகத்தில் புதிதாக 1,189 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.;
பெங்களூரு:
கர்நாடக அரசின் சுகாதாரத்துறை நேற்றைய கொரோனா பாதிப்பு குறித்து வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கர்நாடகத்தில் நேற்று ஒரு லட்சத்து 25 ஆயிரத்து 158 பரிசோதனைகள் நடத்தப்பட்டன. இதில் 1,189 பேருக்கு வைரஸ் பாதிப்பு ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் கொரோனா பாதித்தோரின் மொத்த எண்ணிக்கை 29 லட்சத்து 38 ஆயிரத்து 616 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்புக்கு ஒரே நாளில் 22 பேர் உயிரிழந்தனர். இதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 37 ஆயிரத்து 145 ஆக உயர்ந்துள்ளது.
1,456 பேர் குணம் அடைந்து வீடு திரும்பியதை அடுத்து குணம் அடைந்தவர்களின் எண்ணிக்கை 28 லட்சத்து 80 ஆயிரத்து 889 ஆக அதிகரித்துள்ளது. 20 ஆயிரத்து 556 பேர் மருத்துவ சிகிச்சையில் உள்ளனர். பெங்களூரு நகரில் 267 பேர், தட்சிண கன்னடாவில் 286 பேர், ஹாசனில் 75 பேர், குடகில் 55 பேர், மைசூருவில் 79 பேர், சிவமொக்காவில் 24 பேர், உடுப்பியில் 132 பேருக்கு வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
பெங்களூரு நகரில் 2 பேரும், தட்சிண கன்னடாவில் 4 பேரும், மைசூரு, மண்டியா, தார்வார், துமகூரு, உடுப்பியில் தலா 2 பேரும் என மொத்தம் 22 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.
இவ்வாறு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.