சத்தியமங்கலம் மார்க்கெட்டில் கனகாம்பரம் பூ கிலோ ரூ.960-க்கு ஏலம்

சத்தியமங்கலம் மார்க்கெட்டில் கனகாம்பரம் பூ கிலோ ரூ.960-க்கு ஏலம் போனது.

Update: 2021-08-22 20:30 GMT
சத்தியமங்கலம்
சத்தியமங்கலம் கரட்டூர் ரோட்டில் பூ மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இந்த மார்க்கெட்டில் தினமும் காலை 7 மணி முதல் மதியம் 2 மணி வரை பூக்கள் ஏலம் நடைபெறும். அதன்படி நேற்று ஏலம் நடந்தது. இந்த ஏலத்துக்கு சத்தியமங்கலம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 40-க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து 4½ டன் பூக்களை விவசாயிகள் விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர். 
இதில் மல்லிகைப்பூ கிலோ ஒன்று ரூ.787-க்கும், முல்லை ரூ.240-க்கும்,  காக்கடா ரூ.240-க்கும், செண்டுமல்லி ரூ.100-க்கும், பட்டுப்பூ ரூ.125-க்கும், ஜாதிமல்லி ரூ.350-க்கும், கனகாம்பரம்    ரூ.960-க்கும், சம்பங்கி ரூ.70-க்கும், அரளி ரூ.90-க்கும், துளசி ரூ.40-க்கும், செவ்வந்தி ரூ.200-க்கும் ஏலம் போனது.

மேலும் செய்திகள்