கால்வாய்க்குள் கார் பாய்ந்து முந்திரி வியாபாரி சாவு
குலசேகரம் அருகே கால்வாய்க்குள் கார் பாய்ந்து முந்திரி வியாபாரி பரிதாபமாக இறந்தார்.
குலசேகரம்,
குலசேகரம் அருகே கால்வாய்க்குள் கார் பாய்ந்து முந்திரி வியாபாரி பரிதாபமாக இறந்தார்.
முந்திரி வியாபாரி
குமரி மாவட்டம் குலசேகரம் அருகே மணியங்குழி தாணிக்குண்டு பகுதியை சேர்ந்தவர் பீர்முகமது. இவருடைய மகன் ஹல்லாஜ் (வயது 33), முந்திரி வியாபாரி.
இவருக்கு திருமணமாகி அல்பிதா (25) என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர். ஹல்லாஜ் தனது காரில் முந்திரி பருப்புகளை விற்பனைக்காக ஏற்றி செல்வது வழக்கம்.
கால்வாய்க்குள் பாய்ந்தது
அதன்படி நேற்று முன்தினம் இரவு வியாபாரத்தை முடித்து விட்டு காரில் ஹல்லாஜ் வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்தார். அஞ்சுகண்டறை கால்வாய்க்கரை வழியாக மணியங்குழியை அடுத்த துறைநல்லூர் பகுதியில் வந்தபோது, திடீரென கார் கட்டுப்பாட்டை இழந்து கால்வாய்க்குள் பாய்ந்தது. இதில் தண்ணீரில் மூழ்கி ஹல்லாஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இதுபற்றி தகவல் அறிந்த குலசேகரம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து காருக்குள் சிக்கி இருந்த ஹல்லாஜின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குலசேகரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கால்வாய்க்குள் கார் பாய்ந்து முந்திரி வியாபாரி பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.