முககவசம் அணியாத 20 பேருக்கு அபராதம்

முககவசம் அணியாத 20 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

Update: 2021-08-22 19:39 GMT
திசையன்விளை:

திசையன்விளை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் லிவி பால்ராஜ் மற்றும் போலீசார் நேற்று மாலை திசையன்விளை வடக்கு பஜார் பகுதியில் கொரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

அப்போது முககவசம் அணியாத 20 பேருக்கு அபராதமாக தலா ரூ.200 விதித்தனர். மேலும் ஹெல்மெட் அணியாமல் மோட்டார் சைக்கிளில் வந்த 15 பேருக்கு அபராதம் விதித்தனர்.
இதேபோல் உவரி பகுதியில் ஹெல்மெட் அணியாமல் மோட்டார் சைக்கிளை ஓட்டி வந்த 20 பேருக்கு சப்-இன்ஸ்பெக்டர் முத்துராஜ் அபராதம் விதித்தார்.

மேலும் செய்திகள்