காட்டுப்பகுதியில் இறந்து கிடந்த மான்
காரியாபட்டி அருகே காட்டுப்பகுதியில் மான் இறந்து கிடந்தது.
காரியாபட்டி,
காரியாபட்டி அருகே கட்டுக்குத்தகை கரிசல்குளம் கண்மாயில் ஆண்மான் இறந்து கிடந்தது. இதுகுறித்து பொதுமக்கள் கொடுத்த தகவலின்பேரில் வனசரக அலுவலர் கோவிந்தன், காப்பாளர் ஜெயச்சந்திரன், வனவர் அபிஷேக் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று இறந்த மானை மீட்டனர். காட்டுப்பகுதியில் சுற்றிதிரிந்த மானை தெருநாய்கள் விரட்டி கடித்ததில் மான் இறந்ததாக தெரிகிறது. இறந்த மானை கால்நடை உதவி மருத்துவர் சத்தியபிரபா உடற்கூறு செய்த பிறகு காட்டுப் பகுதியில் அடக்கம் செய்யப்பட்டது.