மின்கம்பங்கள் மீது கார் மோதி விபத்து
திசையன்விளை அருகே மின்கம்பங்கள் மீது கார் மோதி விபத்துக்குள்ளானது.
திசையன்விளை:
திசையன்விளை அருகே உப்பச்சம்பாடு கிராமத்தை சேர்ந்தவர் கதிரேசன் (வயது 50). இவர் திருப்பத்தூரில் இருந்து குடும்பத்துடன் காரில் உப்பச்சம்பாட்டிற்கு சென்று கொண்டிருந்தார். காரை திருப்பத்தூரை சேர்ந்த பாலமுருகன் (28) என்பவர் ஓட்டினார்.
நேற்று அதிகாலை மன்னார்புரம் அருகே உள்ள பட்டரைகட்டிவிளை விலக்கு அருகே சென்றபோது கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்தது. இதனால் சாலை ஓரம் நின்ற 3 மின் கம்பங்கள் மீது அடுத்தடுத்து மோதி சாலை ஓரம் நின்றது. இதில் காரில் முன்பகுதி சேதம் அடைந்தது. மின் கம்பத்தில் கார் மோதிய வேகத்தில் மின்சாரம் தடைபட்டதால் காரில் பயணம் செய்தவர்கள் அதிர்ஷ்டவசமாக காயம் இன்றி தப்பினர். இதுகுறித்து திசையன்விளை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.