ராமநாதபுரம் அண்ணாநகர் குட்செட் தெருவை சேர்ந்தவர் மூக்கையா (வயது 60). சுமை தூக்கும் தொழிலாளி. இவர் வேலை இல்லாத நாட்களில் தேங்காய் பறிக்கும் தொழில் செய்து வந்தார்.நேற்று முன்தினம் ராமநாதபுரம் சிங்காரத்தோப்பு பகுதியில் ஒருவரது வீட்டிற்கு சென்று தென்னை மரத்தில் ஏறி தேங்காய் பறித்து கொண்டிருந்தார்.அப்போது எதிர்பாராதவிதமாக தவறி கீழே விழுந்தார்.இதில் படுகாயமடைந்த மூக்கையாவை சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர், ஏற்கனவே மூக்கையா இறந்துவிட்டதாக தெரிவித்தார்.இதுகுறித்து அவரது மகன் கார்த்திக் அளித்த புகாரின் அடிப்படையில் ராமநாதபுரம் நகர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.