சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கட்டிட மேஸ்திரி கைது
சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த கட்டிட மேஸ்திரி கைது.
வாணியம்பாடி,
வாணியம்பாடியை அடுத்த பெத்தக்கல்லுபள்ளி அருகே உள்ள கிருஷ்ணன் வட்டத்தைச் சேர்ந்தவர் முருகேசன் (வயது 50). கட்டிட மேஸ்திரி. இவர் 7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இது குறித்து வாணியம்பாடி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் ஜெயலட்சுமி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி, முருகேசனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தார்.