பரமத்திவேலூர் அருகே வக்கீல் வீட்டில் ரூ.30 ஆயிரம் திருட்டு
பரமத்திவேலூர் அருகே வக்கீல் வீட்டில் ரூ.30 ஆயிரம் திருட்டு.
பரமத்திவேலூர்,
பரமத்திவேலூர் அருகே உள்ள நன்செய் இடையாறு பகுதியை சேர்ந்தவர் பார்த்திபன் (வயது 31). வக்கீல். இவருடைய மனைவி மோகனப்பிரியா (28). இவர் கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் இளநிலை உதவியாளராக பணியாற்றி வருகிறார். இவர்கள் இருவரும் நாமக்கல்லில் நடைபெற்ற உறவினர் வீட்டு சுப நிகழ்ச்சிக்கு சென்றிருந்தனர்.
இந்தநிலையில் நேற்று மாலை வீட்டுக்கு வந்த பார்த்த போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் வைக்கப்பட்டிருந்த ரூ.30 ஆயிரம் மட்டும் திருட்டு போனது தெரியவந்தது. இதையடுத்து பரமத்திவேலூர் போலீசில் பார்த்திபன் புகார் அளித்தார்.
அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த பரமத்திவேலூர் போலீசார் மற்றும் தடயவியல் நிபுணர்கள் ஆய்வு செய்து கைரேகைகளை பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பார்த்திபன், மோகனப்பிரியா தம்பதியினர் வெளியூர் செல்வதை அறிந்த மர்ம நபர்கள் மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதியில் பட்டப்பகலில் வீட்டின் பூட்டை உடைத்து திருடி சென்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.