குருபரப்பள்ளி அருகே லாரி மோதி தொழிலாளி பலி
குருபரப்பள்ளி அருகே லாரி மோதி தொழிலாளி பலியானார்.
குருபரப்பள்ளி:
சூளகிரி அருகே உள்ள சென்னப்பள்ளியை சேர்ந்தவர் ஆஞ்சநேயப்பா (வயது 56). கூலித்தொழிலாளி. இவர் குருபரப்பள்ளி பஸ் நிறுத்தம் பக்கமாக நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக சென்ற கன்டெய்னர் லாரி அவர் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த ஆஞ்சநேயப்பாவை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் ஆஞ்சநேயப்பா இறந்தார். இதுகுறித்து குருபரப்பள்ளி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.