சங்கராபுரம்,
சங்கராபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் திருமால், ரவிச்சந்திரன் தலைமையிலான போலீசார் ரோந்து பணி மேற்கொண்டனர். அப்போது பூட்டை கிராமத்தை சேர்ந்த சேகர் (வயது 37) என்பவர் தனது வீட்டின் பின்புறத்தில் சாராயத்தை பதுக்கி வைத்து விற்பனை செய்து கொண்டிருந்தார். இதைபார்த்த போலீசார் அவரை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து சாராயத்தை பறிமுதல் செய்தனர். இதேபோல் சாராயம் விற்றதாக பழையனூர் கிராமத்தை சேர்ந்த அய்யப்பன் (46) என்பவரையும் போலீசார் கைது செய்து அவரிடம் இருந்து சாராயத்தை பறிமுதல் செய்தனர்.