தூத்துக்குடியில் அனிதா பழமுதிர் நிலையம் திறப்புவிழா

தூத்துக்குடியில் அனிதா பழமுதிர் நிலையம் திறப்புவிழா நடந்தது

Update: 2021-08-22 14:15 GMT
தூத்துக்குடி:
தூத்துக்குடி பாளையங்கோட்டை ரோட்டில் அரசு பாலிடெக்னிக் கல்லூரி அருகே அனிதா பழமுதிர் நிலையம் மற்றும் காய்கறி கடை தொடங்கப்பட்டு உள்ளது. இதன் திறப்பு விழா நேற்று காலை நடந்தது. திறப்பு விழாவில் மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு வாழ்த்தினார்.
விழாவில் சிறப்பு சலுகையாக ரூ.300-க்கு காய்கறி, பழங்கள் வாங்கிய வாடிக்கையாளர்களுக்கு ஸ்டீல் வாட்டர் கேன், ரூ.500-க்கு காய்கறி, பழங்கள் வாங்கிய வாடிக்கையாளர்களுக்கு அலுமினிய கடாய் இலவசமாக வழங்கப்பட்டது.
இந்த சலுகை இன்றும் (திங்கட்கிழமை) வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படுகிறது. விழாவில் கடை உரிமையாளர்கள், உறவினர்கள், வாடிக்கையாளர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்