தூத்துக்குடியில் குண்டர் தடுப்பு சட்டத்தில் 4பேர் கைது

தூத்துக்குடியில் குண்டர் தடுப்பு சட்டத்தில் 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2021-08-22 11:58 GMT
தூத்துக்குடி:
தூத்துக்குடியில் கொலை வழக்கில் கைதான 4 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.
கொலை வழக்கு
தூத்துக்குடி மேல சண்முகபுரம் வண்ணார்தெருவை சேர்ந்த நடராஜன் (வயது 38) என்பவர் கடந்த 6.8.2021 அன்று தூத்துக்குடி ராமசாமிபுரத்தில் உள்ள அவரது ஏற்றுமதி, இறக்குமதி நிறுவன அலுவலகம் முன்பு வைத்து குத்திக்கொலை செய்யப்பட்டார். 
இந்த வழக்கில் தூத்துக்குடி தாமோதர நகரை சேர்ந்த தங்கதுரை மகன் தங்ககார்த்திக் என்ற ஆடு கார்த்திக் என்ற கார்த்திக் (25), தூத்துக்குடி சிவந்தாகுளம் ரோடு பகுதியை சேர்ந்த சூசை இருதயசெல்வம் மகன் அந்தோணிமுத்து என்ற அந்தோணிபிச்சை (21), தூத்துக்குடி பெருமாள்புரத்தை சேர்ந்த சவுந்திரபாண்டியன் மகன் அருண்குமார் என்ற அஜித்குமார் என்ற அஜித் (22) மற்றும் தூத்துக்குடி தாமோதரநகர் பகுதி சண்முகசுந்தரம் மகன் மாரிமுத்து (21) ஆகிய 4 பேரையும் தென்பாகம் போலீசார் கைது செய்து பாளையங்கோட்டை ஜெயிலில் அடைத்தனர்.
குண்டர் சட்டம்
இதைத்தொடர்ந்து கைது செய்யப்பட்ட 4 பேரையும் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் பரிந்துரை செய்தார்.
அதன்பேரில் மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ், குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ், 4 பேரையும் கைது செய்ய உத்தரவிட்டார். இந்த உத்தரவு நகலை தென்பாகம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆனந்தராஜன் பாளையங்கோட்டை ஜெயிலில் வழங்கினார்.

மேலும் செய்திகள்