பணம் வைத்து சூதாடிய 24 பேர் கைது

பணம் வைத்து சூதாடிய 24 பேர் கைது

Update: 2021-08-22 11:41 GMT
பல்லடம்
பல்லடம் அருகே உள்ள கரைப்புதூர் ஊராட்சி நொச்சிப்பாளையத்தில் பணம் வைத்து சூதாட்டம் நடைபெறுவதாக பல்லடம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து சப்இன்ஸ்பெக்டர் விஜயகுமார் தலைமையிலான போலீசார் அந்தப்பகுதியில் சோதனை மேற்கொண்டனர். அப்போது நொச்சிபாளையத்தில் உள்ள குருமூர்த்தி என்பவரது வீட்டின் பின்புறம், பணம் வைத்து சூதாடிக்கொண்டிருந்த குருமூர்த்தி வயது29, சதீஷ் 24, சரவண பாண்டியன்31, ஆனந்த் 33 உள்பட 24 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.57 ஆயிரத்து 200 பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும் செய்திகள்