வெள்ளகோவில்
வெள்ளகோவிலில் வாரம்தோறும் ஞாயிற்றுக்கிழமை முருங்கைக்காய் கொள்முதல் மையம் செயல்பட்டு வருகிறது. இந்த கொள்முதல் மையத்திற்கு சுற்றுவட்டார பகுதியில் உள்ள விவசாயிகள் முருங்கைக்காய்களை விற்பனைக்கு கொண்டு வருவார்கள். நேற்று 75 விவசாயிகள் 15 டன் முருங்கைகாய்களை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர். இதில் வெள்ளகோவில், முத்தூர், காங்கேயம், ஆகிய பகுதிகளைச்சேர்ந்த வியாபாரிகள் கலந்துகொண்டு ஒரு கிலோ செடி முருங்கைக்காய் ரூ.15க்கும், கரும்பு முருங்கை ரூ.25க்கும், மரமுருங்கை ரூ.23க்கும் கொள்முதல் செய்தனர். கொள்முதல் செய்த முருங்கைக்காய்களை சென்னை, மதுரை, பெங்களூரு, ஒட்டன்சத்திரம், கோவை பகுதியிலுள்ள ஓட்டல்கள் மற்றும் மார்க்கெட்டுகளுக்கு அனுப்பி வைத்தனர்.
--
----