ஒருவரை தாக்கியதாக 4 பேர் கைது

ஒருவரை தாக்கியதாக 4 பேர் கைது செய்யப்பட்டனர்.;

Update: 2021-08-21 22:05 GMT
பாடாலூர்:
பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா தேனூர் கிராமத்தை சேர்ந்தவர் செல்வராஜ்(வயது 56). அதே கிராமத்தை சேர்ந்த அவரது உறவினர் செல்லதுரை(35). இந்நிலையில் பொது கிணற்றில் உள்ள மின் மோட்டார் பழுது ஏற்பட்டதால் அதனை செல்வராஜ் பணம் செலவு செய்து சரி செய்துள்ளார். மேலும் அதற்கான பணத்தை அவர், செல்லதுரையிடம் கேட்டுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு முன் விரோதமாக மாறியது. இந்நிலையில் முன்விரோதம் காரணமாக செல்வராஜ் தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்த அவர் சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது குறித்த புகாரின்பேரில் பாடாலூர் போலீசார் வழக்குப்பதிந்து செல்லதுரை, அய்யப்பன், பெரியசாமி, ராமச்சந்திரன் ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

மேலும் செய்திகள்