கூழாங்கல் கடத்திய லாரி பறிமுதல்
கூழாங்கல் கடத்திய லாரி பறிமுதல் செய்யப்பட்டது.;
கீழப்பழுவூர்:
அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகே உள்ள ஏலாக்குறிச்சி மெயின்ரோட்டில் அரியலூர் மாவட்ட புவியியல் மற்றும் சுரங்கத்துறை உதவி பொறியியலாளர் நாகராஜன் வாகன சோதனையில் ஈடுபட்டார். அப்போது அந்த வழியே வந்த மினி லாரியை மறித்து சோதனை செய்தபோது, அதில் கூழாங்கல் இருந்தது தெரியவந்தது. இதுகுறித்து டிரைவரிடம் விசாரித்தபோது, முன்னுக்கு பின் முரணாக பேசியதால் சந்தேகமடைந்த நாகராஜன், திருமானூர் போலீசில் புகார் செய்தார். இதற்கிடையே டிரைவர் அங்கிருந்து தப்பியோடிவிட்டார். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், மினி லாரியை பறிமுதல் செய்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து கூழாங்கல் கடத்தி வரப்பட்டது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.