சாராயம் கடத்தியவர் கைது; மொபட் பறிமுதல்
சாராயம் கடத்தியவர் கைது செய்யப்பட்டு, மொபட் பறிமுதல் செய்யப்பட்டது.
வேப்பந்தட்டை:
பெரம்பலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மணி உத்தரவின்படி, மதுவிலக்கு அமலாக்க பிரிவு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சுஜாதா தலைமையில், இன்ஸ்பெக்டர் தமிழரசி மற்றும் போலீசார் நேற்று ரோந்து சென்றனர். அப்போது வேப்பந்தட்டை தாலுகா காரியானூர் செல்லியம்மன் கோவில் அருகே சந்தேகப்படும்படியாக மொபட்டில் வந்தவரை பிடித்து விசாரித்தபோது, அவர் காரியானூரை சேர்ந்த பெரியசாமி (வயது 57) என்பது தெரியவந்தது. மேலும் அவரின் மொபட்டை சோதனை செய்தபோது, அதில் விற்பனைக்காக 15 லிட்டர் சாராயம் கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார், பெரியசாமியை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் சாராயம் மற்றும் மொபட்டை போலீசார் பறிமுதல் செய்தனர்.