கர்நாடகத்தில் புதிதாக 1,350 பேருக்கு கொரோனா

கர்நாடகத்தில் புதிதாக 1,350 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

Update: 2021-08-21 21:58 GMT
பெங்களூரு:

கர்நாடகத்தில் நேற்றைய கொரோனா பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

  கர்நாடகத்தில் நேற்று ஒரு லட்சத்து 57 ஆயிரத்து 509 பேருக்கு கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இதில் புதிதாக 1,350 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதன்மூலம் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 29 லட்சத்து 37 ஆயிரத்து 427 ஆக உயர்ந்து உள்ளது. மேலும் 18 பேர் கொரோனாவுக்கு இறந்தனர். இதனால் பலி எண்ணிக்கை 31 ஆயிரத்து 123 ஆக உள்ளது. நேற்று 1,648 பேர் குணம் அடைந்த நிலையில், டிஸ்சார்ஜ் ஆனோர் எண்ணிக்கை 28 லட்சத்து 79 ஆயிரத்து 433 ஆக உயர்ந்து ள்ளது. 20 ஆயிரத்து 845 பேர் மருத்துவ சிகிச்சையில் உள்ளனர்.

  தட்சிண கன்னடாவில் 320 பேர், பெங்களூரு நகரில் 260 பேர், உடுப்பியில் 177 பேர், மைசூருவில் 102 பேர், ஹாசனில் 101 பேர் உள்பட 26 மாவட்டங்களில் பாதிப்பு பதிவாகி இருந்தது. 4 மாவட்டத்தில் புதிதாக யாருக்கும் வைரஸ் பாதிப்பு ஏற்படவில்லை. தட்சிண கன்னடாவில் 4 பேர், ஹாசன், கோலார், சிவமொக்காவில் தலா 2 பேர், பல்லாரி, பெலகாவி, பெங்களூரு நகர், பெங்களூரு புறநகர், தாவணகெரே, ஹாவேரி, மைசூரு, ராமநகரில் தலா ஒருவர் இறந்தனர். 18 மாவட்டங்களில் உயிரிழப்பு இல்லை.
  இவ்வாறு சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது.

மேலும் செய்திகள்