ஆதிகேசவப்பெருமாளுக்கு ஓணவில்
ஓணப்பண்டிகையையொட்டி திருவட்டார் ஆதிகேசவப்பெருமாளுக்கு நேற்று மாலை ஓணவில் சமர்ப்பிக்கும் நிகழ்ச்சி பக்தர்கள் இன்றி நடந்தது.
திருவட்டார்,
ஓணப்பண்டிகையையொட்டி திருவட்டார் ஆதிகேசவப்பெருமாளுக்கு நேற்று மாலை ஓணவில் சமர்ப்பிக்கும் நிகழ்ச்சி பக்தர்கள் இன்றி நடந்தது.
ஓணவில்
திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் ஓணப்பண்டிகை நாளில் ஓண வில் சமர்ப்பிப்பது வழக்கம். இது மன்னராட்சி காலத்தில் இருந்தே நடைமுறையில் உள்ளது.திருவோண நாளில் மாலை நேர தீபாராதனைக்கு முன் ஓணவில்களில் ஆதிகேசவப்பெருமாள் மற்றும் கிருஷ்ணன் உருவம் செதுக்கப்பட்டு வர்ணம் பூசப்பட்ட வில்களை பட்டுத்துணியில் மூடி தென்மேற்கு மூலையில் வைப்பார்கள். அந்த நேரத்தில் ஆதிகேசவபெருமாள் மற்றும் ஸ்ரீகிருஷ்ணன் ஸ்ரீவேலி நடைபெறும்போது, பகவான் முன்பு வில்கள் சமர்பிக்கப்படும்.
தீபாராதனை
இந்நிகழ்ச்சி நேற்று மாலை நடந்தது. மேள தாளம் முழங்க ஓணவில்களுடன் கோவில் பிரகாரத்தைச்சுற்றி வந்தபின்னர் ஓணவில்கள் கிருஷ்ண சாமி கோவில் கருவறையிலும், ஆதிகேசவப்பெருமாள் பாலாலய சன்னதியிலும் வைக்கப்பட்டது. பின்னர் தீபாராதனை நடந்தது. நேற்று பக்தர்கள் இன்றி கோவில் பணியாளர்களுடன் நிகழ்ச்சி நடைபெற்றது.
ஏற்பாடுகளை கோவில் மேலாளர் மோகன்குமார் மற்றும் பணியாளர்கள் செய்திருந்தனர்.