58 கிராம கால்வாயில் தண்ணீர் திறந்துவிடக் கோரி ஆர்ப்பாட்டம்
58 கிராம கால்வாயில் தண்ணீர் திறந்துவிடக் கோரி தமிழ் தேசிய பார்வர்டு பிளாக் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது
உசிலம்பட்டி
உசிலம்பட்டி பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் சிலை அருகே, உசிலம்பட்டி விவசாயிகளின் கனவு திட்டமான 58 கிராம கால்வாயில் உடனடியாக தண்ணீர் திறக்க நிரந்தர அரசாணை வழங்க கோரியும், உசிலம்பட்டி காவல் நிலையங்கள் இடியும் நிலையில் உள்ளது. அதை புதிதாக அமைத்து தரக்கோரியும், நகராட்சிக்கு உட்பட்ட அனைத்து வார்டுகளிலும் சாலை வசதி, குடிநீர் வசதி, கழிவுநீர் வாய்க்கால் வசதி, தெருவிளக்கு போன்ற அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரியும், வன்னியர்களுக்கு வழங்கிய 10.5 சதவீத இட ஒதுக்கீட்டை மறுசீரமைப்பு செய்து சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி அதன் அடிப்படையில் இட ஒதுக்கீடு வழங்கக் கோரியும், நிரந்தர டி.என்.டி. சான்றிதழ் வழங்கிட கோரியும் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.