மணல் கடத்திய 2 பேர் கைது

மணல் கடத்திய 2 பேர் கைது;

Update: 2021-08-21 19:04 GMT
சமயபுரம், ஆக.22-
சமயபுரம் போலீசார் நேற்று முன்தினம் இரவு வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் சமயபுரம் சுங்கச்சாவடி அருகே நின்ற லாரியை நிறுத்தி சோதனை செய்ததில் அதில் மணல் கடத்தி வந்தது தெரியவந்தது. இதனையடுத்து, லாரியில் இருந்த ஸ்ரீரங்கம் சந்திரா நகரைச் சேர்ந்த  கணேஷ் (வயது 29), கம்பரசம்பேட்டை முஸ்லிம் தெருவைச் சேர்ந்த  முகம்மது இப்ராகிம் (25) ஆகியோரை கைது செய்து லாரியை பறிமுதல் செய்தனர்.

மேலும் செய்திகள்