வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை
புளியங்குடி அருகே வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
புளியங்குடி:
புளியங்குடியை அடுத்த சங்கனாப்பேரியை சேர்ந்த முருகன் மகன் சூர்யா (வயது 18). இவர் கடந்த சில நாட்களாக தனது குடும்பத்தினரிடம் புதிய செல்போன், மோட்டார் சைக்கிள் வாங்கி தரசொல்லி சண்டை போட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு சண்டை போட்டு விட்டு வெளியில் சென்றவர் வீடு திரும்பவில்லை. நேற்று காலையில் சங்கனாபேரி அருகில் உள்ள கொட்டகையில் சூர்யா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து புளியங்குடி போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, சூர்யா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக புளியங்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.