சிங்கம்புணரியில் சாலையில் திடீர் பள்ளம்

சிங்கம்புணரியில் சாலையில் திடீர் பள்ளம் ஏற்பட்டது.

Update: 2021-08-21 18:50 GMT
சிங்கம்புணரி,

 சிங்கம்புணரி பகுதியில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் சாலை பணிகள் நடைபெற்று வருகிறது. நத்தத்தில் இருந்து திருப்பத்தூர் வரை சாலை விரிவாக்கப் பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் சிங்கம்புணரி பஸ் நிலையம் அருகில் சுமார் இரண்டு அடி அகலத்தில் 6 அடி ஆழத்தில் திடீர் பள்ளம் ஏற்பட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அப்பகுதியில் உள்ள சமூக ஆர்வலர்கள் சாலையில் பயணிக்கும் வாகன ஓட்டிகள் பள்ளத்தில் விழாமல் இருக்க கற்களை வைத்து அடுக்கி வைத்தனர். இது குறித்து தகவல் அறிந்ததும் பொக்லைன் எந்திரம் வரவழைக்கப்பட்டு தற்காலிகமாக மண், கற்கள் போட்டு மூடப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்