லாட்டரி சீட்டு விற்றவர் கைது

சிவகாசியில் லாட்டரி சீட்டு விற்றவரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2021-08-21 18:36 GMT
சிவகாசி, 
சிவகாசி கிழக்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் மனோகரன் சோலை காலனியில் ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்போது அங்குள்ள ஒரு வாகன காப்பகத்தின் அருகில் மருதுபாண்டியர் மேட்டுத்தெருவை சேர்ந்த கோவிந்தராஜ் மகன் சந்தோஷ் (வயது 20) என்பவர் சந்தேகம் அளிக்கும் வழியில் நின்று கொண்டிருந்தார். அப்போது அவரை அழைத்து போலீசார் விசாரித்த போது வெள்ளை தாளில் கேரள லாட்டரி என்று கூறி எண்களை எழுதி பொதுமக்களிடம் விற்றது தெரியவந்தது. இதை தொடர்ந்து அவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து ரூ.550-யை பறிமுதல் செய்தனர்.

மேலும் செய்திகள்