சாலையில் திரிந்த 7 குதிரைகள் வஉசி பூங்காவில் அடைப்பு

சாலையில் திரிந்த 7 குதிரைகள் வஉசி பூங்காவில் அடைப்பு

Update: 2021-08-21 18:35 GMT
கோவை
கோவை செல்வபுரம் பகுதியில் சாலையில் 7 குதிரைகள் நேற்று மாலை சுற்றித் திரிந்தன. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மேலும் குதிரைகள் மிரண்டு ஓடியதால் விபத்து ஏற்படும் அபாயமும் உருவானது. 

இது குறித்த தகவலின் பேரில் கோவை மாநகராட்சி ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு வந்து 7 குதிரைகளையும் பிடித்து சென்று கோவை வ.உ.சி. உயிரியல் பூங்காவில் அடைத்தனர். 

இதுகுறித்து உயிரியல் பூங்கா கால்நடை டாக்டர் செந்தில்நாதன் கூறுகையில், குதிரைகளை சாலையில் திரிய விட்டதால் அதன் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்படும். 


அதன்பிறகு அவர்களிடம் குதிரைகள் ஒப்படைக்கப்படும். உரிமையாளர்கள் வராவிட்டால் குதிரைகள் கோசாலையில் ஒப்படைக்கப்படும் என்றார்.

மேலும் செய்திகள்