பாலிதீன் பை விற்ற கடைக்கு சீல்
வத்திராயிருப்பு பகுதியில் பாலிதீன் பை விற்ற கடைக்கு சீல் வைக்கப்பட்டது.
வத்திராயிருப்பு,
வத்திராயிருப்பு முத்தாலம்மன் பஜார் பகுதியில் உள்ள டீக்கடை, பேக்கரி, பெட்டிக்கடைகளில் நேற்று உணவு பாதுகாப்பு அலுவலர் வெங்கடேஸ்வரன் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது தடைசெய்யப்பட்ட பாலிதீன் பைகளை அவர் பறிமுதல் செய்தார். இதையடுத்து அவர் பஜார் பகுதியில் ஒரு பலசரக்கு கடையில் ஆய்வு மேற்கொண்ட போது அந்த கடையில் ரூ.30 ஆயிரம் மதிப்புள்ள தடை செய்யப்பட்ட பாலிதீன் பைகள் இருந்துள்ளது. இதனையடுத்து அந்த கடைக்கு சீல் வைத்தார். அரசு தடை செய்துள்ள பாலிதீன் பைகளை தொடர்ந்து விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் எச்சரிக்கை விடுத்தார்.