கரூரில் ஒரேநாளில் 7 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி
கரூர் மாவட்டத்தில் நேற்று ஒரேநாளில் 7 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது.
கரூர்,
கொரோனா தடுப்பூசி
கரூர் மாவட்டத்தில் கொரோனா நோய்த்தொற்றை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி பல்வேறு இடங்களில் முகாம்கள் நடத்தப்பட்டு கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. நேற்று முன்தினம் ஒரே நாளில் 3 ஆயிரத்து 600 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது.
இந்தநிலையில் கரூர் நகராட்சிக்குட்பட்ட செல்லாண்டி பாளையம் துணை சுகாதார நிலையத்திலும், வெங்கமேடு திட்ட சாலையில் அமைந்துள்ள திருமண மண்டபத்திலும், கோதூர் அரசு பள்ளியிலும் கொரோனா தடுப்பூசி போடும் முகாம் நேற்று நடைபெற்றது.
நீண்ட வரிசை
கொளந்தானுர் ஆரம்ப பள்ளி, குளித்தலை கீழத்தாலியாம்பட்டி இடைநிலை பள்ளி, தோகைமலை பகுதிக்குட்பட்ட கல்லை மருத்துவமனையிலும், கிருஷ்ணராயபுரம் பகுதிக்குட்பட்ட இரும்புதிபட்டியலிலும், கிருஷ்ணராயபுரம் பேரூராட்சி அலுவலகத்திலும், கடவூர் பகுதிக்குட்பட்ட ரெட்டியாபட்டி அரசு நடுநிலைப்பள்ளியிலும் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.
தாந்தோணி ஒன்றியத்திற்குட்பட்ட உப்பிடமங்கலம் அரசு மேல்நிலைப்பள்ளியிலும், புலியூர் வெள்ளாளப்பட்டி இடைநிலை பள்ளியிலும், பள்ளப்பட்டி இடைநிலை பள்ளியிலும், பரமத்தி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட அணைப்பாளையம் துவக்கப்பள்ளியிலும் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இதில் ஏராளமானோர் நீண்ட வரிசையில் நின்று தடுப்பூசியை செலுத்திக்கொண்டனர்.
7 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி
புன்னம்சத்திரம் அரசு மேல்நிலைப்பள்ளி, கரூர் முத்தனூர் அரசு பள்ளி, திருமுக்கூடலூர் அரசு பள்ளி என 16 இடங்களில் கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்தப்பட்டது. மேலும் கோவாக்சின் 2-வது தவணை தடுப்பூசி செலுத்தும் வகையில் பசுபதிபாளையம் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்திலும், குளித்தலை நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்திலும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டது.
இதையடுத்து மாவட்டத்தில் நேற்று மட்டும் 7 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. இந்த முகாம்களில் கலந்து கொண்டவர்கள் முகக்கவம் அணிந்தும், சமூக இடைவெளியை பின்பற்றியும், நீண்டவரிசையில் நின்று கொரோனா முதல் மற்றும் 2-வது தடுப்பூசியை செலுத்திக்கொண்டனர்.