பிறந்து சில நாட்களே ஆன பெண் குழந்தையை ஓடும் ரெயிலில் விட்டு சென்ற தாய்

பிறந்து சில நாட்களே ஆன பெண் குழந்தையை ரெயிலில் விட்டு சென்று தாய் யார் என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.;

Update: 2021-08-21 18:21 GMT
காட்பாடி,

பிறந்து சில நாட்களே ஆன பெண் குழந்தையை ரெயிலில் விட்டு சென்று தாய்  யார் என்று போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ரெயிலில் சோதனை

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் இருந்து அரக்கோணம் செல்லும் ஓர்க்மேன் சிறப்பு ரெயில் நேற்று இரவு 7.50 மணி அளவில் காட்பாடி ரெயில் நிலையத்துக்கு வந்தது. அந்த ரெயில் 3-வது பிளாட்பாரத்தில் நின்றபோது அதில் காட்பாடி ரெயில்வே சப்-இன்ஸ்பெக்டர் எழில்வேந்தன் தலைமையிலான போலீசார் ஏறி சோதனை செய்தனர். அப்போது, சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் ஒரு கட்டைபை இருந்தது. அந்த பையை எடுத்து போலீசார் சோதனை செய்தனர்.

பெண் குழந்தை

அதில் பிறந்த சில நாட்களேஆன பெண் குழந்தை இருந்தது. இதைக்கண்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து, போலீசார் குழந்தையை பத்திரமாக மீட்டனர். தொடர்ந்து ரெயில்வே டாக்டர் வரவழைக்கப்பட்டார். குழந்தையை சோதனை செய்தார். குழந்தை நலமுடன் இருப்பதாகவும், பிறந்து 3 நாட்கள் ஆகி இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார். பின்னர் சிகிச்சைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு குழந்தையை போலீசார் அனுப்பி வைத்தனர்.
பிறந்தது பெண் குழந்தை என்பதால் 3 நாட்களே ஆன குழந்தையை ஓடும் ரெயிலில் விட்டு சென்ற அந்தக் கல் நெஞ்சம் கொண்ட தாய் யார்? என காட்பாடி ரெயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் ரெயில் நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

மேலும் செய்திகள்