ஜீப் கண்ணாடி உடைப்பு
திருவாரூரில் பா.ஜனதா பிரமுகர் வீட்டில் புகுந்து ஜீப் கண்ணாடியை உடைத்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
திருவாரூர்;
திருவாரூரில் பா.ஜனதா பிரமுகர் வீட்டில் புகுந்து ஜீப் கண்ணாடியை உடைத்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
ஜீப் கண்ணாடி உடைப்பு
திருவாரூர் மடப்புரம் பகுதியை சேர்ந்தவர் நாகராஜன். என்ஜினீயரான இவர் பா.ஜனதா பிரமுகர். இவரது வீடு மடப்புரம் பகுதியில் உள்ளது. நேற்று முன்தினம் இரவு 12 மணி அளவில் மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் நாகராஜன் வீட்டின் காம்பவுண்ட் சுவர் வழியாக ஏறி குதித்து உள்ளே நுழைந்து அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஜீப் கண்ணாடியை செங்கல்லால் தாக்கி உடைத்தனர். இந்த சத்தம் கேட்டு எதிர் வீட்டுக்காரர் வெளியே வந்து கூச்சலிட்டார்.
போலீசில் புகார்
உடனே மர்ம நபர்கள் சுவர் ஏறி குதித்து மோட்டார் சைக்கிளில் தப்பி சென்று விட்டனர். ஜீப் கண்ணாடியை உடைத்த மர்ம நபர்கள் முகத்தில் துணியை கட்டி இருந்ததால் அவர்களின் முகம் தெரியவில்லை என கூறப்படுகிறது. இது குறித்து நாகராஜன் திருவாரூர் டவுன் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.