மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்தவர் சாவு

திருப்புவனம் அருகே மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்தவர் இறந்தார்.

Update: 2021-08-21 17:44 GMT
திருப்புவனம்,

திருப்புவனம் போலீஸ் சரகம், மடப்புரத்ைத சேர்ந்தவர் விஜய்  (வயது 23). இவர் கடந்த 19-ந்தேதி இரவு மடப்புரத்திலிருந்து திருப்புவனத்திற்கு பலசரக்கு சாமான்கள் வாங்க மோட்டார் சைக்கிளில் வந்துள்ளார். மடப்புரம் பகுதியில் உள்ள தனியார் திருமண மகால் அருகே வந்த போது நிலை தடுமாறி கீழே விழுந்தார். இதில் பலத்த காயம் அடைந்த அவரை அக்கம், பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார். இது குறித்து அவரது தந்தை விநாயகமூர்த்தி திருப்புவனம் போலீசில் புகார் செய்துள்ளார். புகாரின் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஏழுமலை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.

மேலும் செய்திகள்