19 தாசில்தார்கள் இடமாற்றம்
19 தாசில்தார்கள் இடமாற்றம் செய்து கலெக்டர் மதுசூதன்ரெட்டி உத்தரவு பிறப்பித்து உள்ளார்.
சிவகங்கை,
சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
திருப்பத்தூர்
சிவகங்கையில் சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தாரராக பணிபுரிந்த கயல்செல்வி சிங்கம்புணரி தாசில்தாரராக மாற்றப்பட்டார். ஏற்கனவே அங்கு பணிபுரிந்த திருநாவுக்கரசு சிவகங்கை குடிமைப்பொருள் தனி தாசில்தாரராக மாற்றப்பட்டார்.
சிவகங்கை
மானாமதுரை சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தாரராக பணியாற்றி வந்த ராமகிருஷ்ணன் மதுரை சுற்றுச்சாலை அலகின் தனி தாசில்தாரராக மாற்றப்பட்டார். ஏற்கனவே அங்கு பணிபுரிந்த தனலட்சுமி மானாமதுரை சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தாரராக மாற்றப்பட்டார்.
சமூக பாதுகாப்பு
சிங்கம்புணரி சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தாரராக பணிபுரிந்த செல்வராணி சிவகங்கை கேபிள் டி.வி. உதவி மேலாளராக மாற்றப்பட்டார்.ஏற்கனவே அங்கு இருந்த மங்கையர்திலகம் சிவகங்கை சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தாரராக மாற்றப்பட்டார்.
சிவகங்கையில் குடிமைப்பொருள் தனி தாசில்தாரராக பணிபுரிந்த மைலாவதி திருப்புவனம் சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தாரராக மாற்றப்பட்டார். ஏற்கனவே இருந்த உமா மகேஸ்வரி தேவகோட்டை தேசிய நெடுஞ்சாலை தனி தாசில்தாரராக மாற்றப்பட்டார்.
காளையார்கோவில்
மானாமதுரை தேசிய நெடுஞ்சாலை தனி தாசில்தாரராக பணிபுரிந்த யாஸ்மின் சகர்பான், சிவகங்கை கலெக்டர் அலுவலக பேரிடர் மேலாண்மை தாசில்தாரராக நியமிக்கப்பட்டார்.