புதிய அத்தியாயத்தை தொடங்கி முழு அரசியலில் ஈடுபடுவேன்
புதிய அத்தியாயத்தை தொடங்கி முழு அரசியலில் ஈடுபடுவேன் என்று ஸ்ரீமுஷ்ணத்தில் நடந்த ம.தி.மு.க. பிரமுகர் திருமண விழாவில் துரை வைகோ பேசினார்.
ஸ்ரீமுஷ்ணம்,
ஸ்ரீமுஷ்ணத்தில் ம.தி.மு.க. மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் செந்தூரப்பாண்டியனுக்கும், சுபஸ்ரீக்கும் திருமணம் நடந்தது. விழாவிற்கு ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் ஏ.என்.குணசேகரன் தலைமை தாங்கினார். அரசியல் ஆலோசனைக்குழு உறுப்பினர் எம்.எஸ்.கந்தசாமி, தலைமை செயற்குழு உறுப்பினர் கே.வி.மோகனசுந்தர், மாவட்ட அவைத்தலைவர் பெருமாள், மாநில மாணவரணி துணை அமைப்பாளர் ராச.எழிலன், மாவட்ட துணை செயலாளர்கள் ஏ.ஜி.எஸ்.ரவி, அன்பழகன், பார்த்திபன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர செயலாளர் சொ.அருள்மணி அனைவரையும் வரவேற்றார்.
விழாவில் சிறப்பு விருந்தினராக துரை வைகோ கலந்து கொண்டு திருமணத்தை நடத்தி வைத்து மணமக்களை வாழ்த்தினார். அப்போது அவர் பேசியதாவது:-
அரசியலில் ஈடுபடுவேன்
எனக்கு அரசியலில் அதிக நாட்டம் இல்லை. என் தந்தை வைகோ வெளியில் வர முடியாத சூழலில், தொண்டர்களின் உணர்வை மதித்து, அவர்களது இல்ல நிகழ்வுகளில் மட்டுமே கலந்து கொண்டு இருந்தேன். ஆனால் இன்றைய சூழலில், சமுதாய பணியில் என்னை நான் முழுமையாக அர்ப்பணித்து கொண்டேன். துரை வையாபுரி என்ற முதல் அத்தியாயம் நேற்றுடன் முடிந்துவிட்டது. இன்று முதல் துரை வைகோ என்ற புதிய அத்தியாயத்தை தொடங்கி, அரசியலில் என்னை முழுமையாக ஈடுபடுத்தி கொள்கிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில் அரசியல் ஆய்வு மைய செயலாளர் மு.செந்திலதிபன், மாவட்ட செயலாளர்கள் என்.ராமலிங்கம், எம்.பிச்சை, க.ஜெய்சங்கர், சு.ஜீவன், சீனுவாசன், பாசறை பாபு ஆகியோர் மணமக்களை வாழ்த்தி பேசினர். விழாவில் பொதுக்குழு உறுப்பினர்கள் ராமமூர்த்தி, கண்ணன், சாமி.அண்ணாதுரை, ஒன்றிய செயலாளர்கள் ராஜாராமன், குமார், தில்லை, செந்தில்குமார், பழனிராஜன், பாஸ்கர், உத்திராபதி, ரமேஷ், காமராஜ், நடராஜன், ராஜேந்திரன், தாமரைச்செல்வன், கோபாலகிருஷ்ணன், ஜவகர், குழந்தைவேலு, தமிழ்வாணன், கலையரசன் மற்றும் பலர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். பொதுக்குழு உறுப்பினர் முனைவர் மு.பைந்தமிழன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.
கட்சியில் இணைந்தனர்
இதனை தொடர்ந்து நகர செயலாளர் சொ.அருள்மணி இல்லத்தில்நடைபெற்ற நிகழ்ச்சியில் துரை வைகோ முன்னிலையில் ஏ.என்.ஜி.லோகு தலைமையில் 50-க்கும் மேற்பட்ட இளைஞர்கள் ம.தி.மு.க.வில் இணைந்தனர்.
அப்போது துரை வைகோ பேசுகையில், சாதி மத அரசியலுக்கு அப்பாற்பட்டு பொதுநல நோக்கத்துடன் சமுதாய பணியை முன்னெடுத்து நீங்கள் செயல்பட வேண்டும் என்று கூறினார்.