போலி மதுபானம் விற்ற வாலிபர் சிக்கினார்

போலி மதுபானம் விற்ற வாலிபர் சிக்கினார்

Update: 2021-08-21 16:37 GMT
வடமதுரை:

வடமதுரை அருகே உள்ள ஊராளிபட்டியில், போலி மதுபானம் விற்கப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் வடமதுரை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பிரபாகரன் தலைமையிலான போலீசார், ஊராளிபட்டி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

அப்போது அதே பகுதியை சேர்ந்த முத்துவீரன் (வயது 34) என்பவர் சீல் வைக்காமலும், லேபில் இல்லாமலும் இருந்த போலி மதுபான பாட்டில்களை வீட்டில் பதுக்கி வைத்து விற்பனை செய்தது தெரியவந்தது. 

இதனையடுத்து முத்துவீரன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 47 மதுபான பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

மேலும் செய்திகள்