கிணத்துக்கடவு தாலுகாவில் இதுவரை 25,500 பேருக்கு கொரோனா பரிசோதனை

கிணத்துக்கடவு தாலுகாவில் இதுவரை 25,500 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Update: 2021-08-21 15:03 GMT
கிணத்துக்கடவு

கிணத்துக்கடவு தாலுகா பகுதியில் கடந்த சில நாட்களாக கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதனைத்தொடர்ந்து சுகாதாரத்துறையினர் பல்வேறு குழுக்களை அமைத்து கிராமங்கள் தோறும் தீவிரகண்காணிப்பு பணியினை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். 

இதில் கொரோனா தடுப்பு விதிமுறைகளை மீறும் நபர்கள் மீது அபராதம் விதித்து வருகின்றனர். மேலும் தடுப்பூசி போடும் பணிகளையும், கொரோனா பரிசோதனை பணிகளையும் சுகாதாரத்துறையினர் தீவிரப்படுத்தி உள்ளனர்.

கிணத்துக்கடவு தாலுகா பகுதியில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் முதல் இதுவரை மொத்தம் 25 ஆயிரத்து 500 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. இதில் மொத்தம் 320 பேருக்கு மட்டும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் 26 பேர் மட்டும் சிகிச்சை பெற்று வருகின்றனர். மற்ற அனைவரும் குணமடைந்து வீடு திரும்பி விட்டனர்.

மேலும் செய்திகள்