நீடாமங்கலம் அருகே விஷம் தின்று பெண் தற்கொலை

நீடாமங்கலம் அருகே விஷம் தின்று பெண் தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2021-08-21 12:55 GMT
நீடாமங்கலம்,

நீடாமங்கலம் அருகே உள்ள ஒளிமதி மெயின் ரோட்டை சேர்ந்தவர் செந்தில். இவருடைய மகள் திவ்யா(வயது22). இவர் தீராத வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். சம்பவத்தன்று வயிற்று வலி அதிகமானதால் திவ்யா வீட்டில் இருந்த எலி மருந்தை (விஷம்) தின்று மயங்கி விழுந்தார். 

அவரை உறவினர்கள் மீட்டு திருவாரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவ மனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி திவ்யா பரிதாபமாக இறந்தார். இது குறித்து நீடாமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்