அதிராம்பட்டினத்தில், ஆட்டோவில் ரூ.50 ஆயிரம் கஞ்சா கடத்தல் - டிரைவர் கைது; 2 பேருக்கு வலைவீச்சு
அதிராம்பட்டினத்தில் ஆட்டோவி்ல் ரூ.50 ஆயிரம் மதிப்பிலான கஞ்சாவை கடத்திய டிரைவரை போலீசார் கைது செய்தனர். மேலும் தப்பி ஓடிய 2 பேரை வலைவீசி தேடிவருகி்ன்றனர்.
அதிராம்பட்டினம்,
அதிராம்பட்டினம் அருகே உள்ள கீழத்தோட்டம் கிராமத்தில் கடலோர பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு தகவல் வந்தது. இ்தையடுத்து அதிராம்பட்டினம் கடலோர போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் மஞ்சுளா தலைமையில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் திருநாவுக்கரசு மற்றும் போலீசார் கடற்கரை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது கீழத்தோட்டம் கிராமத்தில் உள்ள மீன் ஏலக்கூடம் அருகில் ஆட்டோ ஒன்று நின்று கொண்டிருந்தது. ஆட்டோவை போலீசார் சோதனை செய்தனர். அதில் ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள கஞ்சா பொட்டலங்கள் இருந்தது தெரியவந்தது. அப்போது ஆட்டோவில் இருந்த 2 பேர் தப்பி ஓடிவிட்டனர். பின்னர் ஆட்டோ டிரைவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.
விசாரணையில் அவர் பட்டுக்கோட்டையை சேர்ந்த பிரகாஷ் (வயது44) என்பதும், கஞ்சா பொட்டலங்களை கடத்தி வந்ததும் ெதரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரகாசை கைது செய்து, கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனர். மேலும் தப்பி ஓடிய ஜெரிசெல்டன்(24), பெரியதம்பி(25்) ஆகியோரை வலைவீசி தேடிவருகின்றனர்.
மேலும் அதிராம்பட்டினம் கடல் வழியாக கஞ்சா கடத்தி வரப்பட்டதா? என்று போலீசார் கடலோர பகுதியில் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.