திருவள்ளூரில் ரகளையில் ஈடுபட்டவர் கைது
திருவள்ளூரில் ரகளையில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.;
திருவள்ளூர்,
திருவள்ளூர் டவுன் சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் ஆயில் மில் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு் கொண்டிருந்தார். அப்போது அங்கு திருவள்ளூர் பெரியகுப்பம் பகுதியை சேர்ந்த முரளி (வயது 39) என்பவர் போக்குவரத்துக்கும், பொதுமக்களுக்கும் இடையூறு ஏற்படுத்தும் வகையில் சாலையில் நின்று தகாத வார்த்தைகளால் பேசி அரசு சொத்துக்கு சேதம் ஏற்படுத்தும் வகையில் பேசி ரகளையில் ஈடுபட்டு கொண்டிருந்தார். இதை தொடர்ந்து போலீசார் முரளியை கைது செய்து அவரிடம் இது சம்பந்தமாக விசாரித்து வருகின்றனர்.