திருவள்ளூர் அருகே மனைவியை தாக்கிய கணவர் கைது
திருவள்ளூர் அருகே மனைவியை தாக்கிய கணவரை போலீசார் கைது செய்தனர்.
திருவள்ளூர்,
திருவள்ளூரை அடுத்த திருமழிசை மேற்கு மாட வீதியை சேர்ந்தவர் பாபு (வயது 60). இவரது மனைவி சித்ரா என்ற பாத்திமா (வயது 52). கணவன் மனைவிக்கு இடையே குடும்ப தகராறு இருந்து வந்தது. பாபு வேறு ஒரு பெண்ணை 2-வது திருமணம் செய்து கொண்டதாகவும் தெரிகிறது. இந்தநிலையில் நேற்று முன்தினம் பாத்திமா வீட்டில் இருந்தார். அப்போது அங்கு வந்த பாபு அவரை தகாத வார்த்தையால் பேசி அடித்து உதைத்து தான் வைத்திருந்த கத்தியை காட்டி கொலை செய்துவிடுவதாக மிரட்டி விட்டு சென்று விட்டார்.
இதுகுறித்து அவர் வெள்ளவேடு போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து பாபுவை கைது செய்து அவரிடம் விசாரித்து வருகின்றனர்.