கொரோனா பரவல் எதிரொலி: பூட்டிக்கிடந்த கோவிலுக்கு வெளியே நடந்த திருமணங்கள்

பூட்டிக்கிடந்த கோவிலுக்கு வெளியே நடந்த திருமணங்கள் நடந்தன

Update: 2021-08-20 21:13 GMT
எடப்பாடி, ஆக.21-
எடப்பாடி பிரசன்ன நஞ்சுண்டேசுவரர் கோவில், முகரை நரசிம்ம பெருமாள் கோவில், வெள்ளுற்று பெருமாள் கோவில் உள்ளிட்ட அறநிலையத்துக்கு சொந்தமான கோவில்கள் அனைத்தும் கொரோனா பரவலால் பூட்டிக் கிடக்கின்றன. இதற்கிடையே நேற்று வளர்பிறை முகூர்த்தம் என்பதால் கோவிலில் திருமணம் நடத்த வேண்டும் என நினைத்தவர்கள் கோவில் பூட்டிக்கிடந்தததால் ஏமாற்றம் அடைந்தனர். ஆனாலும் பூட்டிக்கிடந்த கோவிலுக்கு வெளியே மந்திரங்கள் ஓத திருமணத்தை நடத்திக் கொண்டனர். இதில் உறவினர்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.

மேலும் செய்திகள்