பிரதோஷ பூஜை

சிவன்கோவில்களில் பிரதோஷ வழிபாடு நடந்தது.

Update: 2021-08-20 21:06 GMT
அலங்காநல்லூர்,

 பாலமேடு பஸ் நிலையம் அருகில் உள்ள சிவன் கோவிலில் ஆவணி மாத பிரதோஷ பூஜைகள் சுவாமிக்கு நடந்தது. இதில் பால், பழம், பன்னீர், விபூதி, சந்தனம், உள்ளிட்டதிரவியங்களால் சிறப்பு அபிஷேகமும், மகா தீபாராதனையும் நடந்தது. இதில் சுற்றுவட்டாரங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்தனர்.
இதற்கான ஏற்பாடுகளை பாலமேடு கிராம பொது மகாலிங்க சுவாமி மடத்து கமிட்டி நிர்வாகிகள் செய்து இருந்தனர். சோழவந்தான் பிரளயநாதசுவாமி கோவில், மதுரை இம்மையிலும் நன்மை தருவார் கோவில் உள்ளிட்ட பல்வேறு சிவன்கோவில்களில் நேற்று பிரதோஷ வழிபாடு நடந்தது.கொரோனா விதிமுறை அமலில் இருப்பதால் சாமி தரிசனத்துக்கு பக்தர்களுக்கு அனுமதி அளிக்கவில்ைல.


மேலும் செய்திகள்