பரோட்டா மாஸ்டர் போக்சோ சட்டத்தில் கைது

சிறுமியை கடத்தி சென்ற பரோட்டோ மாஸ்டர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.;

Update:2021-08-21 01:48 IST
புதூர்,

திருப்புவனம் பகுதியை சேர்ந்த பெரியசாமி மகன் அக்னிராஜ்(வயது 29). இவர் ஒத்தக்கடை பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில் பரோட்டா மாஸ்டராக வேலை பார்த்து வந்தார். அப்போது அங்கு பரோட்டா வாங்க வந்த அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமிக்கும், அக்னிராஜூக்கும் பழக்கம் ஏற்பட்டது. உடனே அக்னிராஜ் அந்த சிறுமியை திருமணம் செய்வதாக ஆசைவார்த்தை கூறி கடத்தி சென்று விட்டார். இது குறித்த புகாரின் பேரில் ேபாலீசார் இருவரையும் தேடி வந்தனர். இந்த நிலையில் செல்போன் செயலி மூலம் சென்னையில் பதுங்கி இருந்த இளம்பெண்ணை மீட்டனர். அவருடன் இருந்த அக்னிராஜை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர். விசாரணையில் சிறுமியை அவர் திருமணம் செய்தது தெரிய வந்தது.


மேலும் செய்திகள்