குலசேகரன்பட்டினம்:
தூத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினத்தில் தனியாருக்கு சொந்தமான 41 வயதான பெண் யானை பவானி இருந்தது. இந்த யானை குலசேகரன்பட்டினம் முத்தாரம்மன் கோவில் விழா, கந்தூரி விழா மற்றும் உடன்குடி பகுதியில் நடைபெறும் விழாக்களில் கலந்து கொள்வது வழக்கம்.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு யானைக்கு காலில் புண் ஏற்பட்டது. இதனையடுத்து கால்நடை துறையை சேர்ந்த பல்வேறு அதிகாரிகள் வந்து பார்வையிட்டு அதற்கான மருத்துவ சிகிச்சை அளித்தனர். யானையின் காலில் ஏற்பட்ட புண்ணிலிருந்து ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டு மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்தனர். கடந்த சில நாட்களாக நிற்க முடியாமல் கடும் அவதிப்பட்டு வந்த யானை படுத்த படுக்கையானது. இந்தநிலையில் நேற்று மாலை யானை பவானி பரிதாபமாக உயிரிழந்தது.